Friday 6 September 2013

தூர்வாரபடாமல் இருக்கும் குளங்கள்



சரியான நீர் மேலாண்மை இல்லாததாலும் குளங்களுக்கு நீர் செல்லும் பாதைகள்(கண்மாய்கள்) ஆக்கிரமிப்பு செய்யபட்டிருப்பதாலும் சரியாக தூர்வாரபடாததாலும், ‘’ காவிரி ஆற்றில் ‘’ தண்ணீர் வந்து பல மாதங்கள் ஆன பின்பும் குளத்திற்கு தண்ணீர் செல்லவழியில்லாததால் இன்றளவும் வறண்டு கிடக்கும் நமது ஊர்
'' குளங்கள், அடி பம்புகள், மேல் மோட்டார்கள், கிணறுகள் ''
இதனால் கோடைகாலத்தில் தண்ணிர் மட்டம் அகல பாதளத்திற்கு சென்றுவிடுகிறது. சாதாரணமாக 20 அடியில் கிடைக்கும் தண்ணிர்
கூட 60 - 150 அடி வரை செல்கிறது.
கோடைகாலத்தில் பெரும் '' குடிநீர் பஞ்சம் '' ஏற்படுகிறது,
மேலும் தூர்வாரபடாத கண்மாய்களால் மழை காலத்தில் தண்ணீர் வடிய
இடம் இன்றி பொது மக்கள் செல்லும் பாதையில் பல மாதங்கள் தேங்கி நிற்கிறது, இதனால் பொதுமக்கள் பெறும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர் மேலும் காலரா, டிங்கு போன்ற (VIRUS)நச்சு கிருமிகள் பரவும் ஆபத்தான நிலை ஏற்படுகிறது. பல அரசுகள் மாறி மாறி வந்தும் இன்றளவும் இந்த அவலம் மாறவில்லை,  இவைகள் எல்லாம் என்றாவது மாறும் என்ற நம்பிக்கையுடன் ஊர்மக்கள்,,,.
                                       இப்படிக்கு
                          -நலம் விரும்பிகள் மணலூர் ஊராட்சி

Monday 2 September 2013

விநாயகர் சதூர்த்தி விழா



அருள்மிகு சிற்றாற்ங்கரை சித்தி விநாயகர் ஆலய விநாயகர் சதூர்த்தி பெருவிழா மிகச்சிறப்பான முறையில் நடைபெற உள்ளதால் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெறுமாறு கேட்டுகொள்கிறோம்
                      ---- நிகழ்ச்சி நிரல் ----
தமிழ் மாதம்
கிழமை
மணி
நிகழ்ச்சி
விசய வருடம்
ஆவணி 24
(09-09-2013)

திங்கள்  
மதியம் 12 மணி
மாலை 6 மணி
இரவு 7.30 மணி
சிறப்பு அபிசேகம்

சந்தனகாப்பு அலங்காரம்

தீபாராதனை & அன்னதானம்
ஆவணி 25
(10-09-2013)
செவ்வாய்
மதியம் 2.30மணி
நாதசுவர இன்னிசை வானவேடிக்கையுடன்
விநாயகர் வீதியுலா

குறிப்பு : அன்று மாலை(10-09-2013) செவ்வாய்கிழமை 6 மணிக்கு மணலூர் காவிரி ஆற்றங்கரையில் விநாயகர் விசர்சனம் மற்றும் அன்னதானம் நடைபெறும்