Friday 5 April 2013

பசுமை தாயகம்

ஐநாவில் பசுமைத் தாயகம்

மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களால் நிறுவப்பட்ட
பசுமைத் தாயகம் அமைப்பு
ஐக்கிய நாடுகள் அவையால் சிறப்பு ஆலோசனை அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ள அமைப்பாகும்
 (non-governmental organization in special consultative status with UN ECOSOC).
இத்தகைய அங்கீகரிக்கப்பட்ட
ஆலோசனை அமைப்புகள் மட்டுமே ஐநா அவையின் கூட்டத்தில் பங்கேற்கவும் பேசவும் முடியும்.

இந்தியாவில் இருந்து ஈழத்தமிழர்களுக்காக ஐநா மனித உரிமை பேரவை (UNHRC) கூட்டத்தில்
பேசும் ஒரே அமைப்பாக 2009 முதல் பசுமைத் தாயகம் செயலாற்றி வருகிறது.

ஐக்கிய நாடுகள் அவையின் அழைப்பின் பேரில் தற்போது ஜெனீவா நகரில்
நடைபேற்றுவரும் 22 ஆவது ஐநா மனித உரிமை பேரவை கூட்டத்தில்


 பசுமைத் தாயகம்
அமைப்பின் சார்பில் ஏழு பேர் கொண்ட குழுவினர் பங்கேற்றுள்ளனர்.
அவர்கள் இலங்கையின் மீது
சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்
தனிஈழம் அமைய வேண்டும் என மனித உரிமை பேரவையின்
உறுப்பினர்களை சந்தித்து வலியுறுத்தினர்.
ஐநா மனித உரிமை பேரவையில் நேரடியாக உரைநிகழ்த்தி அவர்கள் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
பசுமைத்தாயகத்தின் பிரதிநிதிகளாக பங்கேற்றுள்ள

1)பசுமைத்தாயகம் அமைப்பின் செயலாளர் இர.அருள்,
2)வழக்கறிஞர் கே.பாலு,
3)முன்னாள் மக்களவை உறுப்பினர் இரா. செந்தில்,
4)தமயந்தி ராஜேந்திரா,
5)வழக்கறிஞர்கள் தாஷா மனோரஞ்சன்,
6)கார்த்திகா தவராஜா,
7)மருத்துவர் யசோதா நற்குணம்

->>>ஐ.நா சென்று உலகத்தமிழர்களின் எண்ணங்களை பகிர்ந்து கொண்ட பசுமை சொந்தங்களுக்கு
->>>மணலூர் வன்னியர் சங்கம் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்

No comments:

Post a Comment